Friday 9 September 2016

பொய் குருக்கள்

                            

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
     தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
     தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
     பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
     காரணத்தை யறியாத கசடர் தானே.
      
“தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
     சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
     உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
     திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
     காரணத்தை யறியாமல் கதறு வாரே.”  

   குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும், வெறும் காவியுடையும் யோக தண்டம் காலில் பாத குறடு இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள் எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி, இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள் என்றும் பாடலின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றார்கள்.

1 comment: