Saturday 16 October 2021

🌺🌟 அகத்தியர் வாக்கு 36 🌟🌺                   🔯 ஞானிகள் உருவம் 🔯 "              ஆமப்பா வாதியந்தப்பொருள் தானென்றும் அடங்கிநின்ற பஞ்ச கர்த்தாள் அது தானென்றும்   தாமப்பா சத்தி சிவம் தான் தானென்றும் தண்மையுள்ள பஞ்ச கர்த்தாள் தான் தானென்று     ஓமப்பா ஏழுவகை உலகமெல்லாம் உறுதி கொண்டு தானாகத் தான்தானென்று                       சோமப்பா நான்தானே அவன் தானென்றுஞ் சோதி மயமாயிருப்பார் ஞானி தானே." 💠பொருள் விளக்கம் 💠       
முன் பதிவில் ஞானிகள் எப்படி அந்த ஞான நிலையை அடைந்தார்கள் என்று பார்த்தோம் இந்த பதிவில் அவர்களின் நிலை (உருவம் )எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
 ஆன்மீக அன்பர்களே. அந்த ஞான நிலையை அடைந்த ஞானிகள் தான் ஆதி அந்த பொருளாகவும் அதாவது முதலும் முடிவும் இல்லாத நிலையே நான் தான் என்ற நிலையை அடைந்து விடுகிறார்கள் என கூறுகிறார் பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களும் தானே என்றும் நானே சக்தியும் சிவமுமாக இருக்கிறேன் என்றும் பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என சொல்லக்கூடிய ஐவரும் நானாகவே இருக்கிறேன் என்றும் ஏழு உலகங்களாக உள்ள - பூலோகம், புவர்உலகம் , சுவர்உலகம் , மகரஉலகம் , தபோ உலகம் , சனஉலகம் சத்தியஉலகம் எல்லாம் உறுதிகொண்டு நானே எல்லாம் என்று இருப்பார்.
நானே அவன் (கடவுள்) என்ற நிலையில்
🔥 சோதிமயமாக இருப்பார் ஞானிகள் என்கிறார் அகத்தியர். 🎍 இது தான் பேரின்பம், முக்தி நிலை இதைத்தான் சித்தர்கள் விரும்பி அத்தகைய தவத்தை செய்து அந்த நிலையை அடைந்து விடுகிறார்கள். உடலுக்கும் உயிர்க்கும் என்றும் அழிவில்லை இப்படி உள்ளவர்களை கண்ணில் காட்டுங்கள் என்கிறார்களே எப்படி அவர்களை காட்டுவது.
திருக்குறள் "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்" வேண்டியவற்றை தவத்தால் அடைய முடியும் ஆதலால் தவத்தை முயன்று மேற்கொள்ளவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவர்களுடைய பெருமைகளை இவ்வளவுதான் என்றும் சொல்லமுடியாது
 "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று "
இந்த உலகத்தில் இதுவரை இறந்தவர்களை கணக்கிட்டு சொல்ல முடியாததை போல அவர்களின் பெருமைகளை கணக்கிட முடியாது என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவரும் ஒரு சித்தர் தான்.

Tuesday 13 February 2018

உலகம் படைத்த வரலாறு

கேளப்பா  பரம் பொருளாய் நின்ற சோதி
கருணையுடன்  சிவன் தனை படைக்க நினைத்தபோது
பரவெளியில் அழகான சிவமது தான் உண்டாச்சப்பா
சிவனிடத்தில் சத்தி தோன்றி நின்றது
சத்தியிலே சதாசிவந்தான் தோன்றினார்
சதாசிவத்திலே மயேஸ்வரன் தோன்றினார்
மயேஸ்வரனிலே உருத்திரன் தோன்றினார்
ருத்திரனிலே திருமால் தோன்றினார்
திருமாலிலே பிரமன் தோன்றினார்
அப்படி தோன்றிய ஏழு பேரும் ( சிவம்,சத்தி,சதாசிவம்
மயேஸ்வரன், உருத்திரன், திருமால், பிரமன் )
பராபரத்தை ( சோதியை ) அறியமாட்டார்கள்
பரவெளியே பராபரமாய் (பரஞ்சோதியாய்)நிற்கும்
பரமசிவம் (பரம்பொருளாய் நின்ற சோதி) அந்த எழுவரும்
செய்யும் முறையை தீர்க்கமுடன் அவர்களுக்கு அருள் செய்தார்.

இனி முன் தோன்றிய ஏழுபேரும் அவர்கள் செய்யும்
முறைமை தன்னை எடுத்து கூறுகிறேன்
யாரப்பா சொல்வார்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன்
என்கிறார் அகத்தியர் .

ஓம் நமசிவாயம் !

உலகம் படைத்த வரலாறு

              உலகம் படைத்த வரலாறு
பாரப்பா அடிமுடியும் தேடிப்போன
திருமாலும் பிரமனும் காணவில்லை என்று
வேதங்கள் உரைத்த செய்தியப்பா
யார்தான் அறிவார்கள் அந்த சிவ ரூபத்தை
நான் என்னுடைய குருவருளால் தெரிந்த மட்டும்
சொல்லுகிறேன் என்று அகத்தியர் கூறுகிறார்.
அடிமுடியே என்று சொல்வது ஆதியும் அந்தமும் ஆன சிவ ரூபமே
சூரியனும் சந்திரனும் இல்லாத காலம்
இடி மின்னல் மேகம் இல்லாத காலம்
குன்று செடி ஆண் பெண் இல்லாத காலம்
வேத நெறிகள்  இல்லாத காலம்
சாஸ்திரம் ஆறும்இல்லாத காலம்
உபதேசம் இல்லாத காலம்
புண்ணிய பாவங்கள் இரண்டும் இல்லாத காலம்
குல நெறிகள் இல்லாத காலம்
மந்திரங்கள் இல்லாத காலம்
நவகிரகங்கள் இல்லாத காலம்
தேவர்கள் இல்லாத காலம்
அண்ட சராசரம் இல்லாத காலம்
பஞ்ச பூதங்கள் இல்லாத காலம்.
இப்படி சொன்னவையெல்லாம் உருவான விதம் எப்படி என்ற
சூஷமத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் என்கிறார் அகத்தியர்.

Friday 9 September 2016

பொய் குருக்கள்

                            

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
     தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
     தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
     பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
     காரணத்தை யறியாத கசடர் தானே.
      
“தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
     சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
     உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
     திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
     காரணத்தை யறியாமல் கதறு வாரே.”  

   குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும், வெறும் காவியுடையும் யோக தண்டம் காலில் பாத குறடு இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள் எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி, இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள் என்றும் பாடலின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றார்கள்.

Thursday 1 September 2016

சித்தர்பாடல்

                             மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து                   
                             மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்                   
                             பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை                   
                             புரிதலே இறையுணர் வன்றோ!                   
                             செய்கையால், வழக்கால், அச்சத்தால், மடத்தால்                   
                            செய்பொருள் இறைஎனத் தொழுவார்?                   
                            உய்வரோ இவர்தாம்? இதுகொலோ சமயம்?                   
                             உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே!